தடுப்பூசியில் கவனக்குறைவு ?

மருத்துமனை நிர்வாகத்திலும் கவனக்குறைவால் குளறுபடிகள் நிகழ்கிறது. கவனக்குறைவால் ஏற்படும் பின் விளைவை மருத்துவ உலகம் தான் அறியும்.

Update: 2021-04-29 02:39 GMT

கொரோனா தடுப்பூசி மாதிரி படம்

கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது வது அலை வேகமாக பரவிவரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இரண்டாவது அலையில் நல்வாய்ப்பாக சர்வதேச இந்திய ஆராய்ச்சிகளின் காரணமாக தடுப்பூசிகள் கிடைத்துள்ளது. கோவிசீல்டு மற்றும் கோவாக்சின் மத்திய மாநில் அரசுகளால் பரிந்துரைக்கப்பட்ட மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது வரும் 1 ஆம் தேதி முதல் 18 வயது அடைந்தவர்களுக்கும் செலுத்தப்பட உள்ளது. மேற்கண்ட இரண்டு தடுப்பூசிகளில் முதல் கட்டமாக எந்த தடுப்பூசி எடுத்து கொள்கிறார்களோ அதே தடுப்பூசியை தான் குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்து கொள்ள வேண்டும். கொஞ்சம் விபரம் புரிந்தவர்கள் கவனமாக கேட்டு ஊசி போட்டு கொள்கிறார்கள்.

பெரும்பாலானவர்களுக்கு இது குறித்து புரிதல் இல்லை. அதனால், மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்களும் தான் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். கவனக்குறைவால் ஊசியை மாற்றி போட்டு அதன் காரணமாக விபரீதம் நிகழ்ந்தால் அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய இயலாது.

கவனக்குறைவு இந்த முன்னோட்டத்திற்கு காரணம் திருவாரூரில் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆகும்.

மருத்துவர் எழுதி கொடுத்த சீட்டு 

கடந்த 27 ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று திருவாரூர் அடியக்க மங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திருவாரூர் மருதம்பட்டினம் தெருவை சேர்ந்த விஜயா என்பவர் தனது கணவருடன் இரண்டாம் கட்ட தடுப்பூசி எடுத்து கொள்வதற்காக சென்றுள்ளார். தடுப்பூசி தட்டுபாட்டின் காரணமாக இங்கிருந்த பெண் மருத்துவர் விஜயாவிடம் இருந்த புறநோயாளி சீட்டை பெற்று கோவிஷீல்டு தடுப்பூசியை எழுதி கொடுத்து இரண்டு நாள் கழித்து வருமாறு கூறியுள்ளார். விஜயாவின் கணவர் பழனிவேல் அந்த சீட்டை வாங்கி பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் மருத்துவரிடம் கடந்த முறை கோவாக்சின் தடுப்பூசி எடுத்து கொண்டோம். தற்போது கோவிஷீல்டு என்று எழுதிகொடுத்துள்ளீர்களே என்று கேட்டுள்ளார்.

உடனே சுதாரித்து கொண்ட மருத்துவர் உடனே விஜயாவை அழைத்து அவரிடம் இருந்த சீட்டை வாங்கி, கோவிஷீல்டு என்பதை அடித்து கொடுத்து விட்டு கோவாக்சின் என்று எழுதி கொடுத்துள்ளார். நடந்த இந்த தவறை கவனிக்காமல் சம்மந்தப்பட்டவர்கள் சென்றிருந்தால் இரண்டு நாட்கள் கழித்து விஜயாவிற்க்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் இதனால் ஏற்படும் பின் விளைவை மருத்துவ உலகம் தான் அறியும். இந்த செயலை விஜயாவின் கணவர் கண்டித்துவிட்டு சென்று விட்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் பொதுவாக சுகாதாரத்துறையினுடைய நடவடிக்டகைகள் மெத்தன போக்காகவும் பொறுப்பற்ற முறையிலும் கவனக்குறைவாகவும் இருந்து வருகிறது என்ற குற்றசாட்டு பரவலாக வருகிறது. மருத்துமனை நிர்வாகத்திலும் ஏராளமான குளறுபடிகள் நிகழ்கிறது. இது குறித்து தெரிவித்து துறையின் பதிலை பெற்று நடவடிக்கை எடுப்பதற்காக சுகாதாரத்துறை

மருத்துவர் திருத்தம் செய்த சீட்டு.

இயக்குனர் கீதா அவர்களை தொடர்பு கொண்டதாகவும் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் மாவட்ட ஆட்சியர் பிரச்சனையில் தலையிட்டு மருத்துவதுறை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிப்பதற்கும் உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News