நீர்நிலைகளில் குளிக்க செல்வதை தவிர்க்க திருவாரூர் கலெக்டர் வேண்டுகோள்

நீர் நிலைகளில் குளிக்க செல்வதை தவிர்க்குமாறு திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-11-25 02:52 GMT

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆறு, கடற்கரை, ஏரிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் ஆறு, ஏரிகளுக்கு செல்ல வேண்டாம். நீர்நிலைகளின் அருகில் நின்று பொதுமக்கள் செல்பி எடுக்க கூடாது. தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் அதிக நீர்வரத்து சமயத்தில் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மழை.வெள்ள நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது. வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை மேடான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பொதுமக்கள் தங்களது ஆதார்,குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டி, ஒரு வார காலத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் (உணவு வகைகள்) எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய், மருந்து மற்றும் பால் பவுடர், மின்விளக்குகள் மற்றும் உபரி பேட்டரிகள், சுகாதாரத்தை பேணிக்காக்க தேவையான பொருட்கள், முகக்கவசங்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்திருக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை 2021 காலத்தில் மேற்கண்டவாறு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்/

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News