திருவாரூரில் விவசாயிகள் நலனிற்காக வேளாண் காடு வளர்ப்பு திட்டம் துவக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலனிற்காக வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

Update: 2021-11-30 13:35 GMT

திருவாரூரில் நடந்த வேளாண் காடு வளர்ப்பு திட்ட தொடக்க விழாவில் ஒரு விவசாயிக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செம்மையான முறையில் செயல்படுத்தி வருகிறது.தமிழ்நாட்டில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையிலும் விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழலை உருவாக்குவதற்கும் "தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை காண இயக்கம்" என்ற புதிய வேளாண்காடு வளர்ப்புத் திட்டம் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக நலத் துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இதன் முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விவசாய நிலங்களின் வரப்புகளிலும், விவசாய நிலங்களிலும் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இருவரும் இணைந்து விவசாயிகளுக்கு தேக்கு, மகாகனி, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை வழங்கினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வேளாண்பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் இணைந்து பார்வையிட்டனர்

Tags:    

Similar News