திருவாரூரில் அதிமுகவினர் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் ஒன்றிய கழகம் சார்பாக மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2022-02-03 08:58 GMT

திருவாரூர் ஒன்றிய கழகம் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ஒன்றிய கழகம் சார்பாக மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. திருவாரூர் அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து ஒன்றிய கழகம் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருவாரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.கே.யு. மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்வேல் ,மாவட்ட கழக பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News