கடன் தொகை கேட்டு தனியார் நிறுவனங்கள் வற்புறுத்துவதாக பெண்கள் குற்றச்சாட்டு .

வாங்குன பணத்தை கொடுக்கணுமோ?

Update: 2021-05-18 10:15 GMT

கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சிறு, குறு வணிகர்கள் மட்டுமன்றி அன்றாட பிழைப்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்தமாக தொழில் புரிவோர் மற்றும் சாலையோரங்களில் பொருட்கள் விற்போர் ,ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவரும் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இன்னிலையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்கான மாத சந்தா தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என நிர்ப்பந்திப்பதால் பெண்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் தங்களது கணவர்கள் பழ வியாபாரம் மற்றும் ஆட்டோ ஓட்டுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளதாகவும், 10 மணி வரை மட்டுமே கடை திறக்க அனுமதி உள்ளதால் வருமானம் இன்றி இருக்கும் போது கடன் சந்தாவை செலுத்த சொல்வது மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. எனவே கால அவகாசம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர் .

மக்கள் நலனில் அக்கறை கொண்ட அதிமுக அரசு சென்ற ஆண்டு ஊரடங்கின் போது இது போன்ற கடன் சந்தா செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கியது. ஆனால் தற்போதைய திமுக அரசு பொதுமக்கள் மீது அக்கறையின்றி இதுபோன்று கடன் சந்தா வசூல் செய்வதை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டுகிறது.


Tags:    

Similar News