திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி ஜமுனா பணியிடை நீக்கம்

விபத்து தொடர்பான வழக்குகளில் தவறு நடந்திருப்பதாக எழுந்த புகாரால், திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்

Update: 2022-11-14 06:50 GMT

சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி ஜமுனா.

திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி ஜமுனாவை சஸ்பெண்ட் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதியாக பணியாற்றியவர் எம்.கே.ஜமுனா. இவர், நீதிபதியாக பணியாற்றிய காலங்களில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகார்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் குற்றச்சாட்டுகளுக்கான அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதை உறுதி செய்த உயர்நீதிமன்றம், அவரை பணியிடை  நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதற்கான உத்தரவை, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்.

அதனை தொடர்ந்து, உடனடியாக மாவட்ட அமர்வு நீதிபதி பணியில் இருந்து கே.எம்.ஜமுனா விடுவிக்கப்பட்டார். மேலும், அவரது பொறுப்புக்களையும் உடனடியாக ஒப்படைத்தார். எனவே, நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எம்.கே.ஜமுனா பங்கேற்கவில்லை. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நீதிபதியாக ஜமுனா பணியாற்றிய காலங்களில், விபத்து ,இழப்பீடு தொடர்பான வழக்குகளில் தவறுகள் நடந்திருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே, இவர் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மாவட்ட நீதிபதி டிஸ்மிஸ் செய்யப்பட்டது, வக்கீகள் மற்றும் ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் கிளை நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.  நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதிக்கு பதில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் நடைபெற்றது

இதில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்திற்கு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இருசன்பூங்குழலி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார்.  பார் அசோசியேஷன் தலைவர் நாகா குமார் துணைத்தலைவர் சசிகுமார் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் . இறுதியில் சார்பு நீதிபதி நன்றி கூறினார்

இதில் சாலை விபத்து இழப்பீடு ,  மின்சார பயன்பாடு ,  வீட்டு வரி  , குழாய் வரி ,  ஜீவனாம்சம் ,  நில ஆக்கிரமிப்பு ,  தொழிலாளர் நலநிதி கல்விக்கடன் ,  வங்கி கடன்  , சம்பந்தமான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டுக்கான வழக்குகள் என மொத்தம் 4 ஆயிரத்து 962 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் 3 ஆயிரத்து 204 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. வங்கியில் நிலுவையில் உள்ள வழக்குகள் மொத்தம் 354. வழக்குகள் தீர்வு காணப்பட்டது.  வங்கி நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்வு காணப்பட்டதின் மூலம் ரூபாய் 4 கோடியே 53 லட்சத்து 86 ஆயிரத்து 591 ரூபாய் வசூலிக்கப்பட்டது. நீதிமன்ற நிலுவை வழக்குகளில் மொத்தம் 2857 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News