பாஜக-வின் பிளான் B என்ன?
பா.ஜ.க.,வின் பிளான் Bக்கு தேவை எதுவும் இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.;
``இந்த நாட்டின் அரசியலில் ஸ்திரத்தன்மையை உருவாக்க 400-க்கும் மேற்பட்ட இடங்கள் தேவை. அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கான ஆணை பா.ஜ.க-விடம் இருக்கிறது. ஆனால் ஒருபோதும் நாங்கள் அதை செய்யவில்லை." என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எல்லைகளைப் பாதுகாக்கவும், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றவும், ஏழைகளின் நலனை உறுதிப்படுத்தவும் பா.ஜ.க விரும்புகிறது. இந்த தேர்தலில் 272 இடங்களுக்கு குறைவாக வெற்றி பெற்றால், பா.ஜ.க-வின் நடவடிக்கை என்னவாக இருக்கும்... பாஜக-வின் பி பிளான் என்ன எனக் கேட்கிறீர்கள். அப்படி நடப்பதற்காக எந்த சூழலையும் நான் காணவில்லை. 60 கோடி பலம் வாய்ந்த பயனாளிகள் கொண்ட ராணுவம் பிரதமர் மோடியுடன் நிற்கிறது.
அவர்களுக்கு ஜாதியோ, வயதோ கிடையாது. அவர்கள் மீண்டும் பிரதமராக மோடியையே பார்க்கிறார்கள். எனவே, பிளான் ஏ வெற்றி பெற 60%-க்கும் குறைவான வாய்ப்பு இருக்கும் போது மட்டுமே பிளான் பி உருவாக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி அமோக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே பிளான் பிக்கு வேலையில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.