தேனியில் குறைந்தது தக்காளியின் விலை : தற்காலிகம் தான் என வியாபாரிகள் தகவல்

தேனி மார்க்கெட்டில் தக்காளியின் விலை இன்று குறைந்துள்ளது. இது தற்காலிகம் தான் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-11-25 07:28 GMT

தேனி உழவர்சந்தையில் ஆர்வமுடன் தக்காளி வாங்கும் மக்கள்.

தேனியில் தக்காளி விலை கிலோ 80 ரூபாய் ஆக குறைந்தது. இந்த விலை குறைவு தற்காலிகம் தான் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தேனி மார்க்கெட்டில் இன்று தக்காளி முதல் ரகம் 80 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் வரை விலை குறைய காரணம் என்ன என்பது குறித்து வியாபாரிகளிடம் கேட்ட போது, 'நாமக்கல், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேற்று சந்தைக்கு வரவில்லை. அவர்கள் வந்திருந்தால் தக்காளி முழுவதையும் அவர்களே வாங்கிச் சென்றிருப்பார்கள்.

கனமழை, போக்குவரத்து செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்கள் வராததால், தேனி மாவட்டத்தில் இருந்து வேறு எந்த மார்க்கெட்டிற்கும் காய்கறி செல்லவில்லை. உள்ளூர் தேவைக்கு மட்டுமே விற்பனையானதால் விலை குறைந்தது. தக்காளி மட்டுமல்ல, அனைத்து காய்கறிகளுமே விலை குறைந்தது.

இன்று வட மாவட்ட வியாபாரிகள் வந்து விடுவார்கள். எனவே நாளையோ, நாளை மறுநாளோ மீண்டும் பழைய விலைக்கு சென்று விடும். விலை தற்காலிகமாக குறைந்த தகவல் அறிந்து தேனி மக்கள் விரும்பி வாங்கிச் சென்றனர் என்று கூறினர்.

Tags:    

Similar News