மேகமலை வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம்

மேகமலை வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் எதிரொலி, காலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் சென்று மாலை 6 மணிக்குள் கீழே இறங்க வனத்துறை உத்தரவு.

Update: 2020-12-24 04:54 GMT

தேனி மாவட்டத்தில் உள்ள மலை வாசஸ்தலமான மேகமலை பகுதியில் காட்டு யானைகள் புலி, சிங்கம், சிறுத்தை, கரடி, காட்டு மாடு, மான்கள், கருங்குரங்கு போன்ற வனவிலங்குகள் ஏராளமாக காணப்படுகின்றன. மேகமலைப் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் மேகமலைக்கு சென்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மேகமலைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் மற்றும் நாள்தோறும் சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மீண்டும் மேகமலை பகுதிக்கு திரும்பி வருகின்றனர். இந்தநிலையில் மேகமலை பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக சாலையிலேயே உலா வருகின்றன. இதனால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மேகமலைக்கு செல்வதற்கு அடிவாரப் பகுதியான தென்பழனி வனசோதனைச் சாவடியில் இருந்து காலை 6 மணி முதல் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் . மேலே செல்லும் வாகனங்கள் மாலை 5 மணிக்கு புறப்பட்டு 6 மணிக்குள்ளாக கீழே இறங்கி தென்பழனி வனசோதனை சாவடியை கடந்து சென்று விட வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி மேகமலை பகுதியில் வாகனங்கள் ஆறு மணிக்கு மேலாக இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Similar News