குமுளி மலைச்சாலையில் போக்குவரத்துக்கு தடை - மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவு

திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கம்பத்தில் இருந்து குமுளி செல்லும் மலைச்சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் டிசம்பர் 24 முதல் 30ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகின்றன. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-22 14:09 GMT

தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது, தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் முதல் குமுளி வரை நான்கு வழிச்சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது குமுளி மலைச்சாலையில் சிறு,சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற இருப்பதால் டிசம்பர் 24 முதல் 30 ம் தேதி வரை குமுளி செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது. அதற்கு மாற்று வழியாக குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சரக்கு வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் கம்பம் மெட்டு சோதனைச்சாவடி வழியாக செல்லவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Similar News