உலக அருங்காட்சியங்கள் தினம்: தஞ்சை பெரிய கோவிலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பழமையான தொல்லியல் துறையின் கட்டுப் பாட்டில் உள்ள இடங்களை மாணவர்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2022-05-17 06:30 GMT

கோவில் கலை மற்றும் கட்டடக் கலை சார்ந்த கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

உலக அருங்காட்சியங்கள் தினத்தை முன்னிட்டு இந்திய தொல்லியல் துறையின் கோவில் ஆய்வுத்திட்டம் தென் மண்டலத்தின் சார்பில் கோவில் கலை மற்றும் கட்டடக் கலை சார்ந்த கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

உலக அருங்காட்சியக தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது, அதன்படி பழமையான தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்திய தொல்லியல் துறையின் கோவில் ஆய்வுத் திட்டம் தென் மண்டலத்தின் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் விருதுநகர் தனியார் கல்லூரி தமிழ் இலக்கிய மாணவர்கள் பங்கேற்றனர், அவர்களுக்கு தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளர் குமரன் மற்றும் பிரசன்னா ஆகியோர் சிற்பக் கலை மற்றும் கட்டிடக்கலை பற்றி எடுத்துரைத்தனர்.

விழிப்புணர்வு களபயணத்தில் கட்டக்கலை மற்றும் சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் கலாச்சார சின்னங்களாக திகழும் கோவில்களான தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், புள்ளமங்கை ஆலந்துறை மகாதேவர் கோவில், பட்டீஸ்வரம் பஞ்சவன் மகாதேவி கோவில், கங்கைக்கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், மாளிகைமேடு அகழாய்வு களம், மலையடிப்பட்டி சிவா மற்றும் பெருமாள் குடைவரைக்கோவில், விசலூர் சிவன் கோவில், குடுமியான்மலை சிவன் கோவில், சித்தன்னவாசல் பாண்டியர் குடைவரைக்கோவில், கொடும்பாளூர் ,மூவர் கோவில் ஆகிய இடங்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags:    

Similar News