தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் யார் ?: எகிறும் எதிர்பார்ப்பு

தஞ்சை மாநகராட்சி மேயர் பதவியை அலங்கரிக்கபோகும் திமுக வேட்பாளர்கள் யார் என்பது குறித்த ஒரு அலசல்.

Update: 2022-02-25 06:30 GMT

தஞ்சாவூர் மாநகராட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது அதிமுக சார்பில் மேயராக சாவித்திரி கோபால் இருந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களிலும், அதிமுக 7 இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பதவியை முதன் முதலாக திமுக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மேயர் பதவியை அலங்கரிக்கும் மேயர் யார் என்று? மக்களிடமும், கட்சி நிர்வாகிகளிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த மேயர் பதவி போட்டியில்  மூன்று வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

1. அஞ்சுகம் பூபதி,  திமுக மாவட்ட மருத்துவ அணி அமைப்பளராக உள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் நின்று தோல்வி அடைந்தவர். ஸ்டாலின் தாயாரை சென்னையில் கூடவே இருந்து கவனித்தவர். இதனால் ஸ்டாலினின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்.

2. சன்.ராமநாதன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்ட போது, அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தற்போது உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றும் எண்ணத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவருக்கு உதயநிதி ஸ்டாலின் ஆதரவு முழுமையாக உள்ளது.

03.நீலகண்டன் நகர துணைச் செயலாளர் பொறுப்பு வகிப்பவர். தற்போது முதன்முறையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் தனது சொந்த வார்டில் நிக்காமல், வேறு வார்டில் நின்று வெற்றி பெற்றுள்ளார். அங்கு தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றுள்ள அதிமுக வேட்பாளரை தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற உறுப்பினர் நீலமேகத்தின் முக்கியமான ஆதரவாளர்களில் இவரும் ஒருவர்.

ஸ்டாலின் ஆதரவாளரா? உதயநிதி ஆதரவாளரா? அல்லது எம்எல்ஏ ஆதரவாளரா? இவர்களில் யார் மேயர் பதவியை கைப்பற்றப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பிற்கு  வரும் மார்ச் 4 அன்று விடை தெரியும். 

Tags:    

Similar News