தஞ்சையில் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்

கொரோனா 3 வது அலை வந்தாலும் சிகிச்சை அளித்திட கூடுதலாக 1000 புதிய படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் தயாராக உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்.

Update: 2021-07-21 07:00 GMT

தஞ்சையில் சிறப்பு தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார்.

தஞ்சையில் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தஞ்சை மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. பொது மக்களுடன் அதிகம் தொடர்புடன் உள்ள வணிகர்களுக்கென்று சிறப்பு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை துவங்கியுள்ளோம். நேற்று 16 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. மாவட்டம் முழுவதிலும், இதுவரை 5 லட்சத்தி 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதல் கட்ட தடுப்பூசி 4 லட்சத்தி 30 ஆயிரம் பேருக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி 85 ஆயிரம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. 3 வது அலை வந்தாலும் சிகிச்சை அளித்திட முன்னேற்பாடாக 1000 புதிய படுக்கைகள் தயாராக வைத்துள்ளோம். ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.


Tags:    

Similar News