நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுகவுடன் சுமூக பேச்சு வார்த்தை: கே பாலகிருஷ்ணன்

உள்ளாட்சி தேர்தலில் தொடர்ந்து நடத்தாமல் தள்ளி வைத்த அதிமுக மற்றும் துணை போன பாஜகவிற்கு இந்த தேர்தலில் இடமளிக்கக் கூடாது

Update: 2022-01-28 10:45 GMT

தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன்.

தமிழகமும் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில், அந்தந்த நகராட்சிகள், பேரூராட்சிகளில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சுமுகமாக நடைபெற்று நல்ல முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல இடங்களில் இன்று உடன்பாடுகள்  எட்டுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன்  தெரிவித்தார்.

தஞ்சையில்  செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி,  2016 ஆம் ஆண்டு தேர்தல் நடந்திருந்தால், இப்போது ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கும். ஆனால் அதிமுக தேர்தலில் வெற்றி பெறமாட்டோம் என பயத்தினால் தேர்தலை ஒத்தி வைத்து விட்டனர். இது போன்று அனுபவம் தமிழ்நாட்டில் நடந்ததே கிடையாது. ஆனால் கடைசி வரை நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்காமலேயே அவர்கள் போய்விட்டார்கள். இதனால் ஐந்தாண்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய. உள்ள நியாயமான உரிமைகள், அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போனதற்கு அதிமுகதான் பொறுப்பு.

இப்போது ஏன் அதிமுகவும், பாஜகவும் போட்டி போடுகிறார்கள். ஏற்கெனவே தேர்தல் நடத்தாமல், தேர்தலில் என்ன சொல்லி வாக்கு கேட்பீர்கள். ஆகவே, தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தலில் தொடர்ந்து நடத்தாமல் தள்ளி வைத்த அதிமுக மற்றும் துணை போன பாஜகவிற்கு இந்த தேர்தலில் இடமளிக்கக் கூடாது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதச்சார்பற்ற சக்தியான திமுக வெற்றி பெற வேண்டும் என தேர்தல் பணியாற்றுவோம்.

தேர்தல் அறிவித்த பிறகு, தமிழகமும் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில், அந்தந்த நகராட்சிகள், பேரூராட்சிகளில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சுமுகமாக நடைபெற்று நல்ல முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பல இடங்களில் இன்று உடன்பாடுகள் வருவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக நல்ல உடன்பாடு ஏற்படும்.

இந்த தேர்தலில் மார்க்சிஸிட் கட்சி போட்டியிடும் இடங்களில் வெற்றி பெறும், அதேபோல் மதசார்பற்ற கட்சிகள் வெற்றிக்கு எங்கள் கட்சி முழுமையாக பணியாற்றும். அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். வருகிற 31ம் தேதி மாநில பொதுக்குழுக் கூட்டம் ஆன்லைனில் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில், இட ஒதுக்கீடு குறித்து முழுமையாக முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். இதில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News