கோணகடுங்கலாறு உடைப்பால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு

மழைநீரில் மூழ்கிய பயர்கள் அனைத்தும் அழுகிவிட்டதால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

Update: 2021-11-28 11:15 GMT

தொடர் மழை காரணமாக கோணங்கடுங்கலாறு உடைப்பால் நீரில் மூழ்கிய சுமார் இரண்டாயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தொடர் மழை காரணமாக கோணங்கடுங்கலாறு உடைப்பால்  நீரில் மூழ்கிய சுமார் இரண்டாயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்களை  மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்ந்து வரும் மழையால் சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதேபோல் போல் தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டை அருகே நாகத்தி பகுதியில் உள்ள கோணங்கடுங்கலாறு வடிகால் வாய்க்கால் உடைந்து, விளைநிலங்களில் தண்ணீர் செல்வதால் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் அடுத்தடுத்தடுத்து இடங்களில் உடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் வாய்காலில் உள்ள அடைப்புகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வடிகால் வாய்கால்களை முறையாக தூர்வாராததே உடைப்பு ஏற்படுவதாகவும், எனவே முறையாக தூர்வார வேண்டும், மழைநீரில் மூழ்கிய பயர்கள் அனைத்தும் அழுகிவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பின்னர் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, அப்பகுதிகளில் மணல் மூட்டைகளை கொண்டு அடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு 10,000 ஹெக்டர் நீரில் மூழ்கியுள்ளது. மழை நீர் வடிந்தால் மட்டுமே எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு பெற்று தரப்படும் என அவர் தெரிவித்தார்.


Tags:    

Similar News