வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் முதியவர்

கொரோனா ஊரடங்கு காரணமாக, உணவுகள் இன்றி தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு, முதியவர் ஒருவர் தினமும் உணவு வழங்கி வருகிறார்.

Update: 2021-05-16 16:15 GMT

தஞ்சாவூர், பூக்காரத்தெருவைச் சேர்ந்தவர் ராஜ், 56; இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணமாகி விட்டது.

கேட்டரிங் தொழில் செய்து வரும் ராஜ், கொரோனா ஊரடங்கு காரணமாக, தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு, கடந்த ஒரு வாரமாக, மதிய நேரத்தில் பிரியாணி, முட்டை சாதம், பிஸ்கட்டுகளை, ஒரு பேப்பர் பிளேட்டில் வைத்து வழங்கி வருகிறார்..

இதனால், தெரு நாய்கள், ராஜ் வண்டியில் வருவதை கண்டதுமே, குழந்தைகள் போல தாவி குதித்து ஓடி சென்று, வாலை ஆட்டி நிற்கின்றன. இதை பார்த்த பலரும், நெழிச்சியடைந்து அவரை பாராட்டுகின்றனர்.

இது குறித்து ராஜ் கூறுகையில் கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியமும், 200 பேருக்கு உணவு சமைத்து பொட்டலமாக கொடுத்து வருகிறேன். நான் யாரிடம் எந்த உதவியையும் எதிர்ப்பார்ப்பது கிடையாது. கேட்டரிங்கில் வரும் வருமானத்தை கொண்டு, இதை செய்து வருகிறேன். தற்போது, தினமும், 50 நாய்களுக்கு சாப்பாடு வைக்கிறேன். ஊரடங்கு முடிந்தாலும், இதை தொடர வேண்டும் என்பதே எனது ஆசை என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News