காரை விற்பனை செய்வதாகக்கூறி பணமோசடி செய்தவர் கைது

தஞ்சையில் கார் விற்பனைக்கு தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் பணத்தை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-04-20 12:15 GMT

தஞ்சையில் கார் விற்பனைக்கு தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் பணத்தை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை நடராஜபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் சிங்காரம் (49). இவர் வல்லம் ரோடு, டேவிட் நகர் பகுதியில் சிவாஸ் கார் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தஞ்சை மாதாக்கோட்டை ரோடு, ராஜாளியார் நகர் பால்ராஜ் என்பவரின் மகன் ஞான சவுந்தரராஜிடம் இருந்து கார் வாங்குவதற்காக மூன்று தவணைகளில் ரூ.5.50 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

பின்னர் காருக்குரிய ஆவணங்களை கொடுக்குமாறு கேட்டபோது ஞானசவுந்தரராஜ் மறுப்பு தெரிவித்து தாக்கி மிரட்டல் விடுத்தாராம்.  மேலும் சிங்காரம் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து சிங்காரம்  அளித்த புகாரின்பேரில் தஞ்சை மருத்துவக்கல்லூரி  காவல் நிலைய  இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசவுந்தரராஜை கைது செய்தனர். இது போல் வேறு யாராவது ஞானசவுந்தரராஜிடம் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று  போலீஸார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News