தஞ்சாவூர் பெரிய கோயில் நவராத்திரி விழாவில் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பெரியநாயகி

தஞ்சாவூர் பெரியகோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான இன்று பெரியநாயகி அம்மன், மதுரை மீனாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Update: 2021-10-07 14:15 GMT

தஞ்சை பெரியகோயில் நவராத்திரி விழாவில் பெரியநாயகியம்மன், மீனாட்சியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராசராச சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் யுனொஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது.

இத்தகைய  சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

இத்தகைய புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும். அதேபோல் இந்தாண்டு நவராத்திரி விழா நேற்று சிறப்பு யாகத்துடன் தொடங்கியது.

நேற்று ஸ்ரீபெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டது. விழாவின் இரண்டாம் நாளான இன்று மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News