அண்ணாமலை உட்பட 1,220 பேர் மீது தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு

அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்தியதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1220 பேர் மீது தஞ்சை போலீசார் வழக்கு பதிவு.

Update: 2021-08-06 05:15 GMT

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் நேற்று (ஆகஸ்ட் 5) அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் காரணம் காட்டி அந்நிகழ்ச்சிக்கு போலீஸார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், போலீஸாரின் தடையுத்தரவை மீறி அக்கட்சியினர் நேற்று காலை முதல் மாலை வரை ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் புகாரின் பேரில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் பண்ணைவயல் ஆர்.இளங்கோ உள்பட 20 நிர்வாகிகள் மற்றும் பெயர் குறிப்பிடாத 1200 பேர் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News