தஞ்சை மாநகராட்சி சார்பாக நடமாடும் வாகனம் மூலம் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை

தஞ்சை மாநகராட்சி சார்பாக நடமாடும் வாகனம் மூலம் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

Update: 2021-06-12 05:45 GMT

தஞ்சாவூர் மாநகராட்சியில் வீடு, வீடாக சென்று கொரோனா சோதனை செய்யப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது, இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

அதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தொற்று உள்ள பகுதிகளில் சிறப்பு மருந்துவ முகாம் நடத்துவது,

முன்களப்பணியாளர்களுக்கு முககவசம், சானிடைசர் வழங்குதல், தடை செய்யப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.இதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து முகாம் அமைக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்,

குறிப்பாக தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் வீடு, வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்வது, நடமாடும் வாகனம் மூலம் பரிசோதனை செய்வது என தீவிரமாக பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2,000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News