தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் வார்டுகளில் சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் வார்டுகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

Update: 2021-06-03 07:00 GMT

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவ பெண் பணியாளர் உடல் வெப்பநிலை சோதனை செய்கிறார். 

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக 11 இடங்களில் சிறப்பு மருந்து முகாம் நடத்தப்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 49,125 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40,695 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 6,882 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,630 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 920 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளில் இன்று 11 வார்டுகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதி மக்களிடம் உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News