குடோனில் பதுக்கி வைத்திருந்த 1,500 நெல்மூட்டைகள் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி குடோனில் பதுக்கி வைத்திருந்த, 1,500 நெல்மூட்டைகள் மற்றும் இரண்டாயிரம் சாக்குகள் கைப்பற்றப்பட்டன.

Update: 2021-07-20 09:30 GMT

தஞ்சாவூர் - ஆலக்குடி சாலையில், முனியம்பட்டி சாய்பாபா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வல்லத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இந்நிலையில் இந்த குடோனில் உரிமம் இல்லாமல்  1,500 நெல் மூட்டைகள், 2000 சாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் உமாமகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவரது தலைமையில், மேலாளர் ராமமூர்த்தி, தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் வல்லம் போலீசாரை அழைத்து கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு குடோன் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்த போது, நெல் மூட்டைகள், சாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவைகள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு மேலவஸ்தாசாவடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News