Police Have Arrested A Famous Rowdy Who Cut A Youth With A Scythe In Thanjavur-தஞ்சையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: பிரபல ரவுடி கைது

தஞ்சாவூரில் இளைஞரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-26 16:45 GMT

தஞ்சை விளார் ரோடு நாவலர் நகரை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 29). இவர் அதே தெருவில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டில் இருந்து மது குடித்து கொண்டிருந்தார். அப்போது விளார்ரோடு பாத்திமா நகரை சேர்ந்த ரமேஷ் உள்பட 2 பேர் அங்கு வந்தனர்.

திடீரென ரமேஷ் அரிவாளால் அர்ஜுனை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அர்ஜூன் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தார். ரமேஷ் மீது நாச்சியார்கோவில், திருவையாறு, செங்கிப்பட்டி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதும், பிரபல ரவுடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News