நிற்காமல் சென்ற பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்

இத்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகள், நரிகுறவர் காலனி நிறுத்ததில் மட்டும் பேருந்தை நிறுத்தாதால் சிறைப்பிடித்தனர்

Update: 2021-11-17 06:45 GMT

தஞ்சாவூர் அருகே நிற்காமல் சென்ற பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

நரிகுறவர்கள் வசிக்கும் புதுக்குடி பகுதியில், அரசு பேருந்தை நிறுத்த மறுப்பதால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக கூறி,  அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள்  அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நரிகுறவரின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று இப்பகுதிமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பள்ளிகூடங்கள் இல்லாததால் அருகில் உள்ள ராயன்பட்டி, மலையேறிபட்டி கிராமங்களில் உள்ள பள்ளி கூடங்களில் படித்து வருகின்றனர்.

சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு அரசு பேருந்தில் தினமும் சென்று வருகின்றனர். இந்நிலையில் இத்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகள், நரிகுறவர் காலனி பேருந்து நிறுத்ததில் மட்டும் பேருந்தை நிறுத்த மறுப்பதாகவும், இதனால் அன்றாடம் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவாதாக குற்றம்சாட்டி, பள்ளி மாணவர்கள் உட்பட 50 -க்கும் மேற்ட்டவர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்தை நிறுத்ததாத ஓட்டுநர், நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News