மினி ஆட்டோவில் கடத்தல்? தப்பி குதித்த 5 மாணவர்கள் படுகாயம்

தங்களை கடத்திவிட்டதாக ஓடும் மினி ஆட்டோட்டோவில் இருந்து குதித்த ஐந்து பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

Update: 2021-07-23 11:15 GMT

மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தஞ்சை மருத்துவமனை.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால், அரசு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் முட்டைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள் அவரவர் பள்ளிகளுக்கே சென்று வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளிக்கோட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று முட்டை, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை பெற, தஞ்சை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த 25 மாணவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

அங்கு முட்டை உள்ளிட்ட பொருள்களை வாங்கி கொண்டு மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அப்போது அங்கு இருந்த சில இளைஞர்கள், அந்த வழியாக வந்த மினிலோடு வேனை தடுத்து நிறுத்தி, மாணவர்களை அருகில் இருக்கும் உசிலம்பட்டி கிராமத்தில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளனர். 25 பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு மினிலோடு வேன் சென்றுள்ளது.

உசிலம்பட்டி கிராமத்தில் வேன் நிற்காமல் சென்றதால் மாணவர்கள் கூச்சலிட்டுள்ளனர். மேலும் அருகில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தையும் தாண்டி வேன் சென்றதால், பதற்றமடைத்த ஐந்து மாணவர்கள் வேனில் இருந்து குதித்து உள்ளனர். இதில் மாரிமுத்து(13), ரம்யா (13), சரண்யா(13), சசிரேகா(13), கலைவாணி (12) ஆகிய மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வேன் ஒட்டுநர், ராஜசேகரன்(36), நான் பிள்ளைகளை கடத்தவில்லை என்றும், 25 பிள்ளைகளை ஏற்றி வரும் போதும் எப்படி நான் கடத்துவேன். வேனை நிறுத்தவதற்குள் பிள்ளைகள் குதித்துவிட்டதாகவும், நான் தான் 108 க்கு போன் செய்து பிள்ளைகளை மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறுகிறார்.

இது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News