புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்த பொதுமக்கள்

புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-07-18 09:15 GMT

புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அம்மன் புற்று மண்ணால் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் அம்மனுக்கு அபிஷேகம் எதுவும் நடைபெறாது, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு மட்டுமே நடைபெறும்.

இத்தகைய பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, கோயிலில் பகதர்கள் அதிகளவில் குவிந்தனர். மேலும் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மொட்டையடித்து, காதுகுத்தி தங்களுடைய நேர்த்தி கடன்களை செலுத்தினர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags:    

Similar News