தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷ வழிப்பாடு: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2021-12-16 14:45 GMT

பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,

பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஏற்ற பெரு நந்திக்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும். அதைப்போல் மார்கழி மாதத்தின் முதல் பிரதேசமான இன்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப்பொடி, கரும்புச்சாறு, அரிசிமாவு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரு நந்திக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சமூக இடைவெளியுடன் அமைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News