பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

Update: 2022-05-06 15:00 GMT

பூண்டி மாதா பேராலயம் 

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் 300Poondi Madha Basilica ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி, பேண்ட் வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

முன்னதாக பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் - அந்தோணிசாமி கொடிக்கு புனிதம் செய்து கொடியினை ஏற்றி வைத்தார். இதில் தமிழகம், கேரளா மாநிலங்களிலிருந்து ஏராளமான கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா வருகிற 14ம் தேதி நடைபெறுகிறது.

Tags:    

Similar News