தஞ்சை மாவட்டத்தில் 1,510 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

தஞ்சை மாவட்டத்தில் 1,91,510 குழந்தைகளுக்கு 1,510 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-02-27 03:45 GMT

போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

தஞ்சை மாவட்டத்தில் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மருத்துவகல்லூரி முதல்வர் ரவிக்குமார் தொடங்கி வைத்தனர். தஞ்சை மாவட்டத்தில் மாவட்டத்தில் மட்டும் 1,91,510 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 1,510 முகாம்களில் நடைபெற்று வருகிறது. இதில் 1,428 நிரந்த மையங்களும், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட 82 இடங்களில் நடமாடும் மையங்களும் செயல்பட்டு வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக தஞ்சை மாவட்டத்தில் போலியோ பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News