காவல்துறை அனுமதியின்றி கபடி போட்டி: 8 பேர் மீது வழக்குப்பதிவு

போலீசை கண்டதும் கபடி வீரர்கள் அனைவரும் தப்பிஓடியதால் அங்கிருந்த மைக்செட், ஜெனரேட்டர் ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர்

Update: 2021-08-30 08:45 GMT

தஞ்சை அருகே அரசு அனுமதி இன்றி கபடி போட்டி நடத்திய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

தஞ்சாவூர் மாவட்டம், கண்டிதம்பட்டு அருகில், அரசு விதிமுறை மற்றும்  கொரோனா நெறிமுறைகளை மீறியும், காவல்துறை அனுமதி இன்றியும் கபடி போட்டி நடத்தப்பட்டது.   தகவல் கிடைத்தும்  தாலுகா போலீசார் . உடனடியாக  போட்டி நடந்த  இடத்திற்கு  சென்றனர்.  போலீசைக் கண்டதும், கபடி நடத்தும் குழுவினர் அனைவரும் தப்பித்து ஓடிவிட்டனர். பின்னர்  அங்கிருந்த மைக் செட், ஜெனரேட்டர் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் திவ்யா கொடுத்த புகாரின் பேரில் கோபிநாத், ரமேஷ், வீரமணி, மணிகண்டன், மகேஷ், அருண்குமார், மணிகண்டன், ஆதி, ஆகிய 8 பேர் மீதும் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News