பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி 600 கிலோ காய்கறிகள் இனிப்புடன் அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகத்தன்று சிவன் ஆலயங்களில் வழிபட்டால் வாழ்வில் அனைத்து சகல சௌபாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம்

Update: 2021-10-20 12:15 GMT

தஞ்சை பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி மற்றும் 600 கிலோ காய்கறிகள் மற்றும் இனிப்புடன் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

ஐப்பசி பவுர்ணமி அன்று சிவாலயங்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி பவுர்ணமியன்று உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி, 600 கிலோ காய்கறி மற்றும் இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அன்னாபிஷேகத்தன்று சிவன் ஆலயங்களில் வழிபட்டால் வாழ்வில் அனைத்து சகல சௌபாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம். இந்நிலையில் அன்னாபிஷேகம் முடிந்து, அன்னம் நீர்நிலைகளில் கரைக்கப்படும் எனவும், இதன்மூலம் அனைத்து ஜீவராசிகளும் உணவு கிடைக்கும் என்பது ஐதீகம் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர். அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பொதுமக்கள், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News