பேரறிவாளன் விடுதலை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு - பழ.நெடுமாறன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Update: 2022-05-18 06:30 GMT

தஞ்சையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பேட்டியளித்தார். 

பேரறிவாளன் விடுதலை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என தஞ்சையில் பழ.நெடுமாறன் பேட்டி.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த விடுதலைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சையில் அளித்த பேட்டியில், பேரறிவாளன் விடுதலை என்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்றும், இதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த தீர்ப்பின் அடிப்படையில், மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 26 குடும்பத்தினருக்கும் மத்திய அரசும், மாநில அரசும் நிவாரணம் வழங்க வேண்டும். இது மனிதாபிமான செயல் எனவும் அவர் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பினை அடிப்படையாக கொண்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News