தஞ்சாவூரில் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர் கைது

விண்ணப்பத்தை பரிசீலித்த சாமிநாதன் மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் அளிக்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்

Update: 2021-10-11 17:00 GMT

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை ஆணையரை லஞ்சம் வாங்கியதாக பிடித்த போலீஸார்

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக, ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் பனகல் கட்டிடத்தில் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் துணை ஆணையராகவும், அலுவலக மேலாளராகவும் பணியாற்றுபவர் எம்.சாமிநாதன் (55). தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை , ராஜராஜன் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தரன். இவர் தன்னுடைய பெயரிலும், தனது தாயார் பெரியலும் உள்ள மூன்று மனைகளை வரைமுறைப்படுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்திருந்தார்.

விண்ணப்பத்தை பரிசீலித்த சாமிநாதன் மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் அளிக்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத அரவிந்தன், லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுரையின்படி சாமிநாதன் கேட்ட லஞ்ச பணத்தை  இரவு 7.30 மணியளவில் ரூ.9 ஆயிரத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராஜூ, இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீஸார் சாமிநாதனை கையும் களவுமாக கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News