தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

Update: 2022-02-14 03:15 GMT

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே 44ஆயிரம் சதுரஅடி நிலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் இருந்தது. இதில் பாரம்பரியம்மிக்க சுதர்சன சபா என்கிற நாடக சபை இருந்தது. 100ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் ஒப்பந்த காலம் முடிந்து அதனை மாநகராட்சியிடம் ஒப்படைக்காமல், உள்ளூர் திமுக பிரமுகர்கள் இடத்தை ஆக்கிரமித்து, அங்கு மதுபான கடை, பார் உள்ளிட்டவைகள் விதிகளை மீறி நடத்தி வந்தனர்.

மேலும் ஒப்பந்த தொகை 20 கோடி மாநகராட்சி செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சி ஆணையர் கடந்த 15 நாட்கள் முன்பே இடத்தை நீதிமன்ற உத்தரவுபடி கைப்பற்றினர்.

இதனையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட இடத்தில் இருந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி என கூறப்படுகிறது.

Tags:    

Similar News