நவராத்திரி விழா: தஞ்சை பெரியநாயகி அம்மனுக்கு சதஸ் அலங்காரம்

நவராத்திரி விழாவில் இன்று தஞ்சாவூர் பெரியகோவில் பெரியநாயகி அம்மனுக்கு சதஸ் அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன.

Update: 2021-10-08 15:15 GMT

தஞ்சை பெரியகோவில், பெரியநாயகி அம்மனுக்கு, நவராத்திரியை முன்னிட்டு இன்று,  சதஸ் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்,  ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம்,  யுனொஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்திற்கு,  தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இத்தகைய புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும். அதேபோல் இந்தாண்டு நவராத்திரி விழா,  கடந்த 6 ஆம் தேதி சிறப்பு யாக பூஜைகளுடன் தொடங்கியது.

விழாவின் மூன்றாம் நாளான இன்று, பெரியகோவில் பெரியநாயகி அம்மனுக்கு சதஸ் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News