தஞ்சாவூர் அருகே இந்துக்கள் கொண்டாடிய மொகரம் பண்டிகை

தஞ்சாவூர் அருகே காசவளநாடு கிராமத்தில் இந்துக்கள் மொகரம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

Update: 2022-08-09 12:46 GMT

இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் மொகரம் பண்டிகையும் ஒன்று. இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மொரகம் பண்டிகையை கொண்டாடி உள்ளனர். முஸ்லிம்களால் கொண்டாடப்படும் இந்த பண்டிகை மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்துக்களாலும் கொண்டாடப்படுகிறது.

இந்த விழா கொண்டாடப்பட்டது எங்கே என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு புதூர் என்ற கிராமத்தில் தான் இந்த விழா இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நேற்றல்ல, சுமார் 200வருடங்களாக கொண்டாடப்படுவதாக கூறுகிறார்கள் இந்த கிராம மக்கள்.

மொகரம் பண்டிகையன்று முஸ்லிம்கள் பஞ்சா எனப்படும் கரகத்தை அந்த கிராமத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் எடுத்து செல்கிறார்கள்.ஒவ்வொரு வீட்டிலும் அவர்களது வேண்டுதல் நிறைவேற கரகத்திற்கு தண்ணீர் ஊற்றி மாலை மற்றும் பட்டுத்துணிகள் பட்டுத்துணிகள் சாத்துகிறார்கள்.

பின்னர் அதனை பள்ளிவாசலுக்கு கொண்டு வந்து பாத்தியா ஓதி, தீ மிதித்து வழிபாடு செய்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு திருநீறும், எலுமிச்சை பழமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்படும் இந்த விழா இந்து முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது.

Tags:    

Similar News