வெப்பப்படுத்தாமல் பதப்படுத்தும் நவீன தொழில்நுட்ப கூடம்: மத்திய அமைச்சர் தொடக்கம்

ஆசியாவில் முதலாவதாக வெப்பப்படுத்தாமல் பதப்படுத்தும் நவீன தொழில்நுட்ப கூடத்தை காணொளியில் மத்திய அமைச்சர் தொடக்கி வைத்தார்

Update: 2022-03-09 02:00 GMT

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாட்டு மற்றும் மேலாண்மை கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள நவீன பதப்படுத்தும் தொழில் கூடம்

ஆசியாவில் முதல் முறையாக வெப்பபடுத்தாமல், பதப்படுத்த கூடிய அதி நவீன தொழில்நுட்ப கூடத்தினை மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் பசுபதி குமார் பரேஸ் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் அருகே கீழவஸ்தாச்சாவடி அருகே தஞ்சை - புதுக்கோட்டை சாலையில்  தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாட்டு மற்றும் மேலாண்மை கழகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி உணவு தொடர்பான ஆராய்ச்சிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதோடு தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் மெக்சிகோ தொழில்நுட்ப பல்கலைக் கழகத்துக்கு அடுத்தபடியாக ஆசியாவிலேயே முதல்முறையாக வெப்பபடுத்தாமல், உயர் அழுத்தத்தினால் உணவு பதப்படுத்தும் ஒருங்கிணைந்த கூடத்தினை மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் பசுபதி குமார் பராஸ் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

 உணவுகளை வெப்பப்படுத்தி பலப்படுத்துவதன் மூலம் உணவில் உள்ள கிருமிகள் அழிவதோடு மட்டுமல்லாமல் உணவில் உள்ள ஊட்டசத்துக்கள் அளிக்கப்படுகிறது. ஊட்டச் சத்துகள் குறையாமல் உணவினை பதப்படுத்தும் வகையிலும், சத்தான உணவுகளை வழங்கும் வகையிலும், 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடத்தில் வெப்ப படுத்தாமல் உயர் அழுத்தத்தினால் பதப்படுத்தக்கூடிய பல்வேறு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உள்ளிட்டோர் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News