மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம்

மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம், போராட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

Update: 2021-07-15 12:00 GMT

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில், கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வருவதை கண்டித்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம், தஞ்சை இரயில் நிலையம் அருகே பிஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்ட நிறைவில், அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்க அனுமதி அளிக்காதது கண்டத்திற்குரியது என்றும், உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமனம் செய்ய வேண்டும், கர்நாடக அரசிடமிருந்து ஜீன், ஜீலை மாதத்திற்குரிய 40 டிஎம்சி தண்ணீரை பெற்று தர வேண்டும், ஜல்சக்தி அமைச்சர் மேகதாது பகுதியை பார்வையிட்டு, அணை கட்ட விரைவில் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளதை கண்டித்து வருகிற 26 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

Tags:    

Similar News