தஞ்சாவூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி: 650 காளைகள் 350 வீரர்கள் பங்கேற்பு

தஞ்சை அருகே ராமநாதபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாசியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Update: 2022-03-26 04:30 GMT

தஞ்சாவூர் அருகே ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

தஞ்சாவூர் ராமநாதபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்றது. இதில் 650 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை அருகே ராமநாதபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றறது. இந்த போட்டியை கோட்டாசியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக போட்டியில் பங்கேற்ற வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து வருகின்றனர். வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி தஞ்சை ராமநாதபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News