தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து இந்துமுன்னணியினர் வழிபாடு

தஞ்சை சீனிவாசபுரத்தில் இந்து முன்னணி அமைப்பினர் 4 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர்

Update: 2021-09-10 03:15 GMT

 தஞ்சை சீனிவாசபுரத்தில் 4 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்திய இந்து முன்னணி அமைப்பினர்

தஞ்சையில் தடையை மீறி பொது இடத்தில்  விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்திய இந்து முன்னணி அமைப்பினர்.

கொரனோ பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யக்கூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில்,  தஞ்சை சீனிவாசபுரத்தில் இந்து முன்னணி அமைப்பினர் 4 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர்.  தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்பொழுது, இந்து முன்னணி அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த, கிராம நிர்வாக அலுவலர் அமீர்பீவி பேச்சுவார்த்தை நடத்தி, விநாயகர் சிலையை கைப்பற்றி, அருகில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு காவல்துறையினர் மூலநாக  அனுப்பி வைத்தார். தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட்ட இந்து முன்னணி அமைப்பினர் மீது  வழக்கு பதிவு செய்ய இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News