குளுக்கோஸ் ஏற்றி நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்

மேகதாது அணை திட்டத்தை கைவிடக்கோரி தஞ்சையில் விவசாயிகள் குளுக்கோஸ் ஏற்றும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-12 11:15 GMT

மேகதாது அணை திட்டத்தை கைவிடக்கோரி தஞ்சையில் விவசாயிகள் குளுக்கோஸ் ஏற்றும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்ட முயற்ச்சிப்பதை  கண்டித்து இன்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.  அதே நேரத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோழநாடு சார்பில், விவசாயிகள் ஒன்று திரண்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தங்கள் கைகளில் குளுக்கோஸ் ஏற்றுவது போல் பாவித்து, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் நிலை, நோயாளிகளை போல் படுக்கையில் இருப்பதாக கோரி விவசாயிகள் குளுக்கோஸ் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேகதாதுவில் அணை கட்டுவதை கைவிடவேண்டும், 2020 - 21 ஆண்டு கால பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும், தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை கர்நாடகா உடனே விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.


Tags:    

Similar News