புவிசார்குறியீடு பெற்ற கைவினை பொருட்கள்: கலெக்டர் அலுவலகத்தில் கலைப்பெட்டகம்

தமிழகத்தில் 35 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்றுள்ளதில் தஞ்சாவூர் மாவட்டத்தின் 8 கலைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன

Update: 2021-10-06 13:00 GMT

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் புவிசார்குறியீடு பெற்ற கைவினை பொருட்களுடன் அமைக்கப்பட்டுள்ள  கலைப்பெட்டகம் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற 8 கைவினை பொருட்களை கொண்டு, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைபெட்டகத்தை, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் கலைத் தட்டுகள், தஞ்சாவூர் நெட்டிவேலைப்பாடுகள், தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, ஆகிய 8 கைவினை பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

இதனை பொதுமக்கள் அறிந்துக் கொள்ளும் விதமாக, அதன் உற்பத்தியாளர்களிடம் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட பொருள்களை பெற்று,  கலெக்டர் அலுவலகத்தில் கலைப்பெட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 35 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்று நிலையில், அதில் தஞ்சாவூர் மாவட்டத்தின்  8 கலைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளது. இந்த புவீசார் குறியீடு பெற்ற பொருட்களை பாதுகாக்கவும், இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் வகையில், அமைக்கப்பட்டுள்ள கலைப்பெட்டகம் சிறப்பாக அமையும் என்றார்.  இந்நிகழ்ச்சியில், உதவி கலெக்டர்கள், கலைப்பெட்டகத்தை வடிவமைத்து ஒருங்கிணைப்பு செய்த ஓவியர் மணிவண்ணன், வீணைக் கலைஞர் சின்னப்பா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News