தஞ்சையில் நண்பனின் திருமணத்திற்கு புத்தகங்களை சீராக வழங்கிய நண்பர்கள்

நண்பனின் திருமணத்துக்கு அவரது நண்பர்களை இணைந்து புத்தகங்களை சீர்வரிசையாக எடுத்துசென்று வழங்கி வியப்பில் ஆழ்த்தினர்

Update: 2022-03-16 17:00 GMT

தஞ்சையில் நண்பனின் திருமணத்திற்கு புத்தகங்களை சீராக வழங்கிய நண்பர்கள்  செண்டை மேளத்துடன் புத்தகங்களை தட்டில் வைத்து சீர் சுமந்து வந்து மணமக்களுக்கு கொடுத்து வாழ்த்தினர்.

வழக்கமாக திருமணத்திற்கு முதல் நாள் மணமக்களுக்கு நிச்சயம் செய்யும் பொழுது பழம், புடவை நகை பணம் உள்ளிட்டவை சீதனமாக அளிப்பது வழக்கம், ஆனால் தஞ்சையில் காவல்துறையில் பணிபுரியும் தங்களது நண்பனின் திருமணத்திற்கு செண்டை மேளத்துடன் புத்தகங்களை சீதனமாக வழங்கி நண்பர்கள் அசத்தியுள்ளனர்.

தஞ்சை மகர்நோன்பு சாவடி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த மணமக்கள் காவலர் மோகன்குமார்-சாமுடீஸ்வரி ஆகியோருக்கு  தஞ்சை தனியார் திருமண மண்டபத்தில்  முதல்நாளில்  நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் மோகன் குமாரின் நிச்சயதார்த்தத்திற்கு  வந்த அவரது நண்பர்கள்  திருக்குறள், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறலாம், காமராஜரின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை செண்டை மேளம் முழங்க சீதனமாக மணமக்களுக்கு வழங்கினர். இதனை சீதனமாக பெற்றுக்கொண்ட மணமகன் மோகன்குமார், தன்னுடன் பள்ளியில்  பயின்ற நண்பர்கள் புத்தகங்களை சீதனமாக வழங்கியது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News