பக்கத்து வீட்டு குளியலறைக்கு வெப்கேமரா வைத்து ரசித்த முன்னாள் எஸ்.ஐ., மகன் கைது

பக்கத்து வீட்டு குளியலறைக்கு வெப்கேமரா வைத்து ரசித்த முன்னாள் உதவி காவல் ஆய்வாளர் மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-22 07:30 GMT

கைது செய்யப்பட்ட நசீர் அகமது.

தஞ்சாவூர் தெற்கு வீதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை இவரது வீட்டின் குளியலறையின் மேல ஏதோ மின்னுவது போல் இருப்பதை பார்த்த வெங்கடேசனின் மனைவி, தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குளியலறை சென்று பார்த்தபோது வெப் கேமரா சார்ஜ் இறங்காமல் இருப்பதற்காக பவர்பேங்க் உடன் இணைத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் வெங்கடேசன் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வெங்கடேசன் வீட்டின் அருகில் வசிக்கும் நசீர் அகமது(35) என்பரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில், எனது வீட்டின் அருகில் இருப்பவர் நசீர் அகமது. திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் அவரின் தந்தை ஒய்வு பெற்ற முன்னாள் காவல் உதவி ஆய்வாளர். அவரின் மனைவி அரசு ஊழியர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மகளும், மனைவியும் குளிப்பதை மாடியில் இருந்து பார்த்தார். இது குறித்து அவர் தந்தையிடம் சொன்னபோது, எங்களிடம் சண்டைக்கு வந்தார். எனது வீட்டின் பின்புறம் உள்ள  குளியலறையொட்டி மற்றவருக்கு சொந்தமான காலி வீடு உள்ளது.

அந்த  வீட்டை பார்ப்பதற்கு யாராவது வந்ததால், வீட்டை சுற்றி காட்டுவதற்காக உரிமையாளர் வீட்டின் சாவியை நசீர் அகமதுவிடம் கொடுத்துள்ளனர். இதனை பயன்படுத்தி அந்த வீட்டின் குளியலறை கண்ணாடியை கழற்றி, ஒரு அடி இடைவெளியில் உள்ள எனது குளியலறையின் மேல வெப்கேமராவை பொருத்தி மனைவி, மகள் குளிப்பதை ரசித்துள்ளார். தற்போது அவர் மீது புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தார்.

இதுகுறிதது வழக்கு பதிவு செய்த மேற்கு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News