பொங்கல் பண்டிகை: உச்சத்தைத் தொட்ட பூக்களின் விலை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் பூக்களின் விலை உச்சத்தைத் தொட்டது.

Update: 2022-01-13 12:15 GMT

மாதிரி படம் 

தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. ஓசூர், திண்டுக்கல், நிலக்கோட்டை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளியூர்களுக்கும் பூக்கள் அனுப்பப்படுவது வழக்கம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை என்பதால் பூக்கள் வாங்குவதற்காக  காலையிலிருந்தே பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

தேவை அதிகமாக இருந்ததால் பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது. அதன்படி  கிலோ ரூ.3000-க்கு விற்கப்பட்ட மல்லிகை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.4000-வரை விற்கப்பட்டது. கிலோ ரூ.1500-க்கு விற்கப்பட்ட முல்லை ரூ.2000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைப்போல் கனகாம்பரம் ரூ.1000, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.250, அரளி ரூ.500, ஆப்பிள் ரோஸ் ரூ.150-க்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது

Tags:    

Similar News