தடையை மீறி திறந்திருந்த கடைக்களுக்கு அபராதம்

கொரோனா ஊரடங்கு விதிமுறையை மீறி கடை திறந்து விற்பனை செய்த 20க்கும் மேற்பட்ட கடைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம்.

Update: 2021-05-06 15:45 GMT

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தஞ்சை மாவட்டத்தில் 2,300 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் 300 முதல் 400 என பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மளிகை, பலசரக்கு, உணவகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தஞ்சை தெற்கு வீதியில் ஹார்டுவேர், துணிக்கடை, எலக்ட்ரிக்கல் கடை என பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்ததையடுத்து, காவல்துறையினர் திறந்து இருக்கும் கடைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

தஞ்சை தெற்கு வீதியில் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று அனைவரையும் கலைந்து சொல்லமாறு உத்தரவுவிட்டனர்.

Tags:    

Similar News