விவசாயிகள் சங்கம் சார்பில் வயலில் இறங்கி விவசாயிகள் நூதன போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் வயலில் இறங்கி நூதன போராட்டம்

Update: 2022-04-12 07:45 GMT

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கடும் அவதி, உடனடியாக யூரியா தங்கு தடையின்றி வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் வயலில் இறங்கி நூதன போராட்டம் செய்தனர். 

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் விழுதியூரில் நெல்பயிர், பருத்தி, கரும்பு போன்றவற்றிற்கு அடிப்படை ஆதாரமாக இருந்து வருகின்ற யூரியா உரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் கடைகளிலும் கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதியுற்று வருகின்றனர். சில தனியார் கடைகளில் பதுக்கல் முறையில் யூரியா இருப்பு என்பது இருந்து வருகிறது. உடனடியாக தங்கு தடையின்றி யூரியா உள்ளிட்ட உரங்கள் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க கோரியும், உரங்களின் விலை உயர்வால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.  விவசாய இடு பொருளான உரங்களுக்கான மானியத்தை கூடுதலாக வழங்கி உரங்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தியும், விவசாயிகள் விளைவிக்கிற விளைபொருளுக்கு கட்டுபடியான விலை வழங்கிடவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நூதன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் எம். வெங்கடேசன் தலைமையில் வயலில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News