தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக 42 வார்டுகளில் நேரடியாக போட்டி

தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் கூட்டணி கட்சி 9 வார்டுகளிலும், திமுக 42 வார்டுகளிலும் போட்டி.

Update: 2022-02-02 11:30 GMT

வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தொகுதி பங்கீடு முடிந்து வேட்புமனு தாக்கல் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியை முழுவதும் கைப்பற்ற திமுக, அதிமுக, அமுமுக நேரடியாக மோதுகின்றன. இதில் திமுக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு வார்டுகளிலும் (வார்டு எண் - 35,36), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வார்டிலும் (வார்டு எண் - 15), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வார்டிலும் (வார்டு எண் - 3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு வார்டிலும் (வார்டு எண் - 47), காங்கிரஸ் கட்சியை நான்கு வார்டிலும் (வார்டு எண் -27,30,42,43), திமுக 42 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. தற்போது தொகுதி பங்கீடு நிறைவு பெற்றதால், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News