நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

Update: 2021-08-17 07:30 GMT

தஞ்சையில் ஆர்ப்பாட்டத்த்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர்  

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயமூர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை ஓய்வூதியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். ஓய்வூதியர்களின் சிறப்பு நிதியாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க வேண்டும், 70 வயது முடிந்தவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக மாதந்தோறும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோதண்டபாணி, ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் குருசாமி, மாவட்ட பொருளாளர் பூபதி, ஓய் வீடியோ சங்கம் பால்ராஜ் மற்றும் அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News