டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு: அமைச்சர்

காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2021-06-07 10:00 GMT

தஞ்சையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறுவை சாகுபடிக்காகன ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், குறுவை சாகுபடி குறித்த தஞ்சாவூர் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

ஆய்வுக்கு பின்பு தஞ்சை களிமேடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறுவை பாய் நாற்றங்கால் தயார் செய்யக்கூடிய பணியை பார்வையிட்டார். அப்போது விவசாயிகளிடம் விலை நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார். பின்பு பேட்டியளித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், டெல்ட்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி 3.50 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 1 லட்சத்து 48 ஆயிரம் ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி 1 லட்சத்து 5 ஆயிரம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 46 ஆயிரம் ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விதை நெல், உரம் போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். தூர்வாரும் பணிகள் 30% நிறைவடைந்துவிட்டதாகவும், மேலும் தண்ணீர் வருவதற்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெறும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News